சதுரங்கம் ஆட அமர்கிறோம்
நீ வெள்ளை காய்களையும்
நீ வெள்ளை காய்களையும்
நான் கருப்பு காய்களையும்
அடுக்கிக் கொண்டிருக்கிறோம்
உனக்கு வலப்பக்க குதிரையை
சிப்பாயைத் தாண்டி
இடப்பக்க கட்டத்திற்கு நகர்த்துகிறாய்
எனக்கு இடப்பக்கத்திலிருந்து
இரண்டாவது சிப்பாயை
இரண்டு கட்டத்திற்கு முன்னகர்த்துகிறேன்
சம்பந்தமே இல்லாமல்
பிடிச்சப்பிடி குட்டிப் பாம்புகளை
சதுரங்க பலகையில் தூவுகிறாய்
விரைந்து நெளிந்து முன்னேறிய
இரண்டு பாம்புகளில் ஒன்று ராணியைக் கடிக்க
மற்றொன்று ராஜாவைக் கடிக்க
எனது ராஜாவும் ராணியும்
மடிந்து சாய்கிறார்கள்
எனது ராஜா செத்ததால்
நீ வென்றதாக கோப்பையைக் கேட்கிறாய்
சதுரங்க சட்டத்திற்கு இது புறம்பானதென்கிறேன்
எத்தனை காலத்திற்கு சட்டத்தை ஏற்று விளையாடுவது
சனாதனத்தோடுதான் விளையாடுவேனென்கிறாய்
Comments
Post a Comment