Skip to main content

Posts

Showing posts from 2013

அப்படித்தானோ?

இன்று வழக்கம் போல சமயபுரம் தோல் ப்ளாசாவில் இறங்கி பள்ளிக்கு நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு பத்து அல்லது இருபது தப்படிதான் போயிருப்பேன். மின்னலென ஒரு பெண் மொபெடில் என்னை முந்திச் சென்று மறித்து நின்றாள். ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்தக் குழந்தை. “ஏய் வாய், எப்படி இருக்க?” “ நல்லா இருக்கேன் சார். ஆமா ஏன் சார் இப்படி எளச்சுப் போனீங்க” “வயசாகுதுல்லடா. 50 ஆச்சு. இனி அப்படித்தான்” “ லூசா சார் நீங்க. ” (மிரண்டுடாதீங்க. கீர்த்தி மட்டுமல்ல, இவள் மட்டுமல்ல,இப்போது என்னிடம் படித்துக் கொண்டிருக்கும்  குழந்தைகளும் இப்படித்தான் பேசுவார்கள்) “ நானாடி லூசு?”  “பின்ன. அப்பாவுக்கு 55 ஆகுது. எனக்கென்ன வயசா ஆச்சுன்னு டை அடிச்சு எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கார் தெரியுமா?” ” போதுண்டி கிழவி” “சரி, சரி, வண்டியில ஏறுங்க கொண்டு போய் விடுறேன்” “பக்கம்தானே போயிடறேண்டா. சிரமம் வேண்டாம்”  சிரமம் எல்லாம் இல்ல. போற வழிதான் .” “வேணாண்டா...” “ தள்ளியெல்லாம் விட்டுட மாட்டேன். பயப்படாம ஏறுங்க.” மறுத்தேன். “ இப்ப எங்க அண்ணன் வந்திருந்தான்னா அவன...

கிரீடமல்ல தலைப்பாகை

நல்ல பேனாவும் நல்ல அரசியலும் கை கோர்க்கும்போது எவ்வளவு அழுத்தமாக உயிர்ப்போடு இலக்கியம் உருவாகும் என்பதை ரத்தமும் சதையுமாக நிரூபித்திருக்கிறது தோழர். டி. செல்வராஜின் “ தோல்.” மட்டுமல்ல, இடதுசாரிகள் வர்க்கத்தின்பால் மட்டுமே கவனமாக இருப்பார்கள், வர்ணப்பிரச்சினையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் அல்லது, அவர்கள் வர்க்கப் பிரச்சினையை கவனத்திலெடுக்குமளவிற்கு வர்ணப் பிரச்சினையின்மீது கவனம் குவிக்க மாட்டார்கள் என்பது மாதிரியாக திட்டமிட்டு படிய வைக்கப் பட்டுள்ள பொதுப் புத்தியினை “தோல்”  துனையோடு மிகக் கம்பீரமாக எதிர் கொள்கிறார் தோழர் டி. செல்வராஜ்.  “இந்தியாவில் கம்யூனிச இயக்கங்கள் தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் தோராயமாக 1930 முதல் 1958 வரையிலும் நடைபெற்ற போராட்டங்கள், அதில் ஈடுபட்ட போராளிகளின் பாத்திரங்களை நாவலில் வடித்துள்ளேன்,” என்று 36 வது புத்தக கண்காட்சியில் தனக்கு அளிக்கப் பட்ட பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது தோழர் டி.செல்வராஜ் கூறுகிறார். முதலில் தோழர்கள் A.பாலன் , மற்றும் S.A.தங்கராஜ் ஆகியோரோடு இந்த நாவல் மூலம் உறவாட நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு தோ...

வறண்ட குளத்திலும் கவிதை எடுக்கும் வைகறை

“ நிலாவை உடைத்த கல்” கவிதை நூலை முன் வைத்து... கடந்த ஒரு வார காலமாக எதற்குமே ஒத்துழைக்க மறுக்கிறது உடல். “பயணம் தவிர். ஓய்வெடு,”  என்கிறார் மருத்துவர். “எனக்கப்புறமும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கு. இப்படி இருந்தா எப்படி? ஓய்வெடுத்து உடம்பைக் கவனி,” என்று உதைக்காத குறையாக கடிந்து கொள்கிறார் தலைமை ஆசிரியர். வேறு வழியில்லை. கட்டிலில் தலையணையை சுவரோரமாய் சாய்த்துப் போட்டு சாய்ந்து அமர்ந்தபடி வாசிப்பிற்காக வரிசைகட்டி நிற்கும் நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். தோழர் மோகனா அவர்கள் இரு சுமை நூல்களை கருணையோடு புத்தாண்டிற்கு பரிசளித்திருக்கிறார்கள். அந்தக் குவியலிலிருந்து தோழன் யூமா வாசுகி மிக அருமையாக மொழிபெயர்த்துள்ள “கருப்பழகன்” என்ற நாவலின் 29 வது அத்தியாயத்திற்குள் பயணித்துக் கொண்டிருக்கும்போதுதான் மேல்வீட்டு பாட்டி இன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இரண்டு நூல்கள், மூன்று சிற்றிதழ்கள், கொஞ்சம் தபால்கள். அந்த இரண்டு நூல்களுள் ஒன்று தம்பி வைகறை அனுப்பியிருந்த அவரது “ நிலாவை உடைத்த கல்” என்னமோ தெரியவில்லை, யூமாவின் நூலை ஓரம் மடக்கி வைத்...